என்னை அறிந்தால்

இதோ சில இந்த வலைதளத்தைத்தாண்டி எங்கும் பயன்படாத என்னைப்பற்றிய சிறு தகவல்கள். வெங்கட் என்றோ எழுதிய தற்புகழ்ச்சி பதிவை வைத்து போட்டுக்கொண்ட புதிய சூடு. எண்ணிலா அருந்தவத்தோன் இயம்பிய சொல், மருமத்தினெறிவேல் பாய்ந்த புண்ணிலாம் பெரும்புழையில் கனல்நுழைந்தாலென... இதை ஏற்கனவே கடுப்புடன் படித்து, படித்ததினால் மேலும் வெறியாகும் உங்களுக்கு என்னால் கூறமுடிந்த ஒரே பயன், என்னை இவ்வகையில் அறிவதால், நேரில் எதிர்படுகையில் ஓடிவிடலாம். குழந்தையில் தரையில் நீந்தியதோடு சரி. தண்ணீரில் எனக்கு நீச்சல் தெரியாது. எனக்கு வீடியோ … Continue reading என்னை அறிந்தால்

ஆடு பாம்பே

மாலையில் வாக்கிங் போகலாம் என்று வீட்டிலிருந்து இறங்குகையில் இல்லாள்தான் முதலில் பார்த்தாள் இந்த ஆடும் பாம்புகளை. நிச்சயம் கடிபடாமல் வெற்றியுடன் புறமுதுகிட்டு ஓடிவந்துவிடலாம் என்கிற தூரத்தில் இருந்தபடி, கையில் செல்போனுடன் உயிரையும் பிடித்தபடி, சார் எடுத்த சாரைப்பாம்புகளின் பாலே வீடியோ கீழே. வீடியோவின் ஆட்டம் கையினால் மட்டுமல்ல. வீடியோ நடுவில் கேட்கும் ஆடியோ ”செக்யூரிட்டிய கூப்டு” என்கிற அய்யாவின் தீரமான உறுமலே. செக்யூரிட்டீக்கு போன் போட்டதும், எங்கம்மா பாம்பு, வீட்டுக்கு வெளீ...லதானே, அதுபாட்டுக்கு போயிடும். பயப்படாதீங்க, இப்ப … Continue reading ஆடு பாம்பே

டுவிட்டர் குறள்கள்

திருக்குறளுக்குத்தான் எத்தனை பிரேமை தமிழ்கூறும் இணையுலகில். பத்தாவது பப்ளிக் எக்ஸாமில் அதிக மார்க் வாங்கவேண்டுமென்று பிற மொழிக்காக ஒன்றாவதிலிருந்தே தமிழை ஒதுக்காமல் பள்ளியில் ஒருபாடமாக படிக்கும் அநேகருக்கு முதல் மனப்பாடப்பகுதி குறள்தான். தமிழ் மத்தியமர் பலரின் முதல் இலக்கிய பகடியும் அங்குதான் தொடங்குகிறது. அகர முதல எழுத்தெல்லாம் தகர ஸ்லேட்டில் எழுத வேண்டும் என்பதில் தொடங்கி, பெரியவர் ஆகி அலுவலகத்தில் டை கட்டி வாழ்வாரே வாழ்வார் மற்றவர் கைகட்டி பின் செல்வர் என்று நொந்துகொள்வது வரை குறள்தான் … Continue reading டுவிட்டர் குறள்கள்

Whale வேல்

குசினியறையில் வேலையாய் இருந்த மனைவிக்கு உபயோகமாய் அவளை உற்சாகப்படுத்திக்கொண்டு நான் சும்மா இருந்துகொண்டிருந்தேன். அப்பொழுதுதான் ஒரு வேல் ஷார்க் (Whale Shark திமிங்கலம்) படத்தை யங் வேர்ல்டிலிருந்து கனகாரியமாய் வெட்டி மகளின் நோட்டுப்புத்தகத்தில் ஒட்டியிருந்தோம். அவள்: நா கடலுக்கு அடீல போப்போறே(ன்), வேல் ஷார்க ஃபோட்டோ பிடிக்க; நீ கிடயாது… நான்: (கடுப்பாகி) ஓகே; நா பழனிக்கு போறேன் முருகர பாக்க; அவர்கிட்ட கூட ஒரு வேல் இருக்கு; அத பாத்துக்கறேன்… அவள்: என்னோட வேல் ரொம்ப … Continue reading Whale வேல்

இளம் பேராசிரியர்கள் கூறும் டாப் ட்வென்டி பொய்கள்

இந்தியாவில் ஆய்வு வேலையை ஒரு பகுதியாகக் கொண்ட உயர்கல்வி நிறுவனங்களில் வேலை செய்யும் ஆசிரியர்கள் சேர்ந்த புதிதில் கூறும் டாப் ட்வென்டி பொய்கள் வருமாறு 1. ம்ஹுஹும்...என்னுடைய உண்மையான சாதிக்கும் திறன் மேற்கில்தான் நிதர்சனமாகும். 2. ஆனால் என் மனைவிக்கு அந்த ஊர் தட்பவெப்பத்தில் அடிக்கடி சளி பிடிக்கிறது என்பதால் மேற்கில் இருக்கும் நிறுவனங்களில் நான் வேலைக்கு மனு போடுவதில்லை. 3. என் ஆராய்ச்சி மிகவும் புதிதானது. சொன்னால் சட்டென்று புரியாது. அதனாலேயே வெளியே தெரிந்து புகழடையாமல் … Continue reading இளம் பேராசிரியர்கள் கூறும் டாப் ட்வென்டி பொய்கள்