தொழிலறம்

தர்ம சங்கடம் என்றிருக்கிறது. அறம் = தர்மம் சிக்கல் = சங்கடம் என்று கொண்டால், தர்ம சங்கடம் என்பதைத் தமிழில் அறச்சிக்கல் எனலாம். என்போம். தர்மத்தை அனுஷ்டிக்க நினைப்பவனுக்கே தர்ம சங்கடம் எழும். அறத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்று கருதுபவனுக்கே அறச்சிக்கல்கள் எழும். அறம் செய்ய விரும்பு என்கிறாள் மூதாட்டி. அறம் செய் என்று கட்டளையிடவில்லை. அறம் செய்ய விரும்பு என்று கோருகிறாள். அறம் செய்வது அவரவர் விருப்பம். செய்ய விரும்பு. விரும்பாமல் வேறு செய்தாலும் ஒன்றுமில்லை. … Continue reading தொழிலறம்

சோபனச்சாலை

அவதார ஆளுமை, அவனவனுக்கோர் பொழிப்பறை. தினமொரு பேச்சு, தேங்கினால் போச்சு. ஒட்டியோர் விருப்புரை, வெட்டி ஓர் வெறுப்புரை அடுத்தவன் வைரலானால் அவனுக்கோர் அநாதியுரை. பொதுவெளிப் பொய்மை, பொறுப்பற்ற புலமை. சுயவீக்கச் சிந்தை, சாதிமதச் சந்தை. அநித்திய ஆலாபனை, ஆளுக்காள் நாட்டாமை. ஆள்பவன் அரற்றினால் அவனுக்கோர் அன்லைக்கு. சுயமோகச் சுவர், அஜந்தா குகை. சுப்பனின் சிகை. அவன் மிஸஸின் நகை. எல்லோரா சென்றதே எல்லோர்க்கும் சொல்லவே. என்துறை வல்லமை எக்கேடோ போட்டமே. தற்படத் தாண்டவம், தாவிவரும் தனிவேடம். துகிலுரியச் … Continue reading சோபனச்சாலை

ரிக்கார்டோ ஷாயியும் அருண் நரசிம்மனும்

Riccardo Chailly என்பதை எவ்வாறு உச்சரிப்பது? முதல் பெயரில் நம்பும் உச்சரிப்புத் தர்க்கம் இறுதிப் பெயரில் கவிழ்த்துவிடுகிறது. Riccardo என்பதை அப்படியே வாசித்து ரிக்கார்டோ என்றால், உச்சரிப்பு சரியே. Chailly என்பதை அதே தருக்கப்படி சைலி என்றால் போச்சு. சாய்லீ-யும் இல்லை, ச்சைலி-யும் இல்லை. சில்லி-யும் இல்லை. வானொலி அறிவிப்பில் பிரெஞ்சுப் பெண்மணி Chailly என்பதை ஷாயி… என்கிறார், அதிகாலை மூன்றரை மணி கிரக்கமாய். நமக்கும் ஆசையாகத்தான் இருக்கிறது. கிரக்கமான பிரெஞ்சுப் பெண்குரல் இனி அமையாது என்றாலும் … Continue reading ரிக்கார்டோ ஷாயியும் அருண் நரசிம்மனும்

எனது மின் புத்தகங்கள்

தமிழினி இதுவரை வெளியிட்டுள்ள எனது இரண்டு நாவல்கள் மூன்று அறிவியல் சார்ந்த புத்தகங்கள் தற்போது அமெசான் கிண்டில் வலைதளங்களில் மின் புத்தகங்களாகவும் வெளிவந்துள்ளன. இவற்றை வாங்குவதற்கான பக்கங்களைக் கண்டடைய ‘அருண் நரசிம்மன்’ என்று தமிழிலோ ஆங்கிலத்திலோ (அமெரிக்கா + இந்தியா) அமெசான் வலைதளங்களில் தேடினால் தென்படும். தனிச்சுட்டிகள் இவை ஏலியன்கள் இருக்கிறார்களா? நேனோ ஓர் அறிமுகம் உலகே உன் உருவம் என்ன? நாவல்கள் அமெரிக்க தேசி அச்சுவை பெறினும்… வாசகர்கள் தத்தமது மின்புத்தக வாசிப்பனுபவத்தைப் பகிர்ந்தால் மகிழ்வேன்.

ஜல்லிக்கட்டு – என் மத்யமர் பார்வையில்

பின்வரும் எண்ணங்கள் ஜல்லிக்கட்டு போராட்டம் ஏன் உருவானது எவ்வாறு இத்தனை விசுவரூபம் எடுத்தது போன்றவற்றை விளக்காது. அதெல்லாம் கெடக்கட்டுமய்யா மொதல்ல நீர் என்ன சொல்லும் அப்பால மேல படிக்கலாமா வாணாமானு முடிவெடுத்துகறேன் என்றால் நான் ஜல்லிக்கட்டு ஆதரவாளன். ஆனால் ஜல்லிக்கட்டு எதிர்ப்பாளன் என்றானாலும் என் மதிபேசி தழுவிய மங்காத மத்யமர் வாழ்க்கையின் எத்தருணத்திலுமே எச்செயல்பாட்டிலுமே எவ்வித இழப்புமில்லை என்பதை அறிந்தவன். * நான் சிறுவனாய் ஜல்லிக்கட்டை ஓரிரு முறை வேடிக்கைப் பார்த்திருக்கிறேன். தஞ்சை ஜில்லாவில் நான் பிறந்து … Continue reading ஜல்லிக்கட்டு – என் மத்யமர் பார்வையில்

இசை அறிதலின் பிழையான முன்மாதிரிகள்

ஜெயமோகன் தளத்தில் அருண் என்று ஒருவர் இன்று கேள்வி கேட்டிருக்கிறாரே, நீ தானா? அன்பர் போன் செய்தார். நான் எதற்கு எனக்குத் தெரியாதை அவரிடம் போய்க் கேட்கப்போகிறேன், அதற்குப் பதில் கூறுவதைத் தவிர அவருக்கும்  வேறு வேலைகள் இல்லையா… நினைத்துக்கொண்டாலும், என்ன கேள்வி? என்ன விஷயம்? என்கிறேன். பேஸ்புக்கே பற்றி எரிகிறதே… என்னனு தெரியாதா என்றார் அன்பர். இல்லையே, நீங்க பேஸ்புக்ல தலைய வுட்டுனுக்குறீங்க, நான் ஸென்ஹெய்ஸர் ஹெட்போனில் வுட்டுகினு எம்பாட்டுக்கு பாட்டு கேட்னுகிரேன் என்கிறேன். அன்பர் … Continue reading இசை அறிதலின் பிழையான முன்மாதிரிகள்

அச்சுவை பெறினும்… வாசகி கடிதம்

தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்றத் தீ என்று எங்கோ தமிழ்ப் பால் ஊட்டி வளர்த்திட்டதால், தமிழ்  தாய்மொழியாய் ஆனதில் பெருமையும் பெருமிதமும் கொண்ட “ழ”கரத்தை “ல” என்றும் “ள” என்றும் யாரேனும் கொல்லும் போது நியாயச் சீற்றம் அடையும் சாதாரணத் தமிழச்சி நான். விமர்சனம் செய்யும் தகுதி இல்லையென அறிந்து (அச்சுவை பெறினும்... நாவலைப் பற்றிய) சில கருத்துகளையும் எண்ணங்களையும் மட்டுமே பகிர்கிறேன் இங்கே. நன்றியும் வாழ்த்துகளும்: தமிழிலே எண்ணங்கள் … Continue reading அச்சுவை பெறினும்… வாசகி கடிதம்

தமிழ் இலக்கிய மரபின் அச்சுவார்ப்புகள்

பின்வருவனவற்றில் ‘|’ குறிக்கு இடப்புறம் அனைத்தும் ஒரு கட்சி, வலப்புறம் எதிர்க் கட்சி. கட்சிகள் எவை என்பதை இறுதி வரியில் விளக்கியுள்ளேன். தமிழ் எழுத்தாளனின் புனைவுலகில் தொடங்குவோம். ஏழை | பணக்காரன் (இதன் வகையறா வீட்டுவாசி | அடுக்ககவாசி நடப்பவன் | காரில் செல்பவன் பணியாள் | பணி கொடுத்தவன் பாட்டாளி | பன்னாட்டு நிறுவன அதிகாரி வேலையில்லாதவன் | மேலதிகாரி பீச்சில் சுண்டல் விற்பவன் | அதை வாங்குபவன் இன்ன பிற…) கிராமத்தவன் | நகரத்தவன் … Continue reading தமிழ் இலக்கிய மரபின் அச்சுவார்ப்புகள்

களி(மண்)காலர்கள்

பெரும்பாலும் அக்கப்போர்தான். அவசியம் வாசிக்கலாம். * இருபது வருடங்களுக்கு மேலாக எழுதிய பின்னர் இன்று பிரபலம் என்று அவரைச் சந்திப்போரால் அறியப்படும் ஒரு எழுத்தாளருக்குப் பக்கவாட்டில் தொன்னூறு டிகிரி கோணத்தில் நடந்து முடிந்த புத்தகக் காட்சியில் ஒரு கடையில் அமர்ந்திருக்க நேர்ந்தது. அவருக்கு அந்தப் பக்கம் இருக்கையில் முகநூல் பிரபலம் என்று கருதப்படுபடும் ஒருவர் வந்து அமர்ந்தார். இவரது சீரான எழுத்தும் புத்தகங்களாய் வந்துள்ளது. இருபதாயிரத்திற்கும் அதிகமான லைக்குகள் சம்பாதித்திருப்பதைப் பற்றியும் தொடர்பான சில பல பேச்சுக்களாகவும் … Continue reading களி(மண்)காலர்கள்

அமெரிக்க தேசி – தமிழ் ஹிந்து விமர்சனம்

அமெரிக்க தேசி பற்றி செல்வ புவியரசன் எழுதி இன்றைய தமிழ் ஹிந்து-வில் வெளியாகியிருக்கும் கட்டுரை. ------ இக்கரைப் பச்சை ஆற்றின் எதிர்க்கரை பசுமை மிகுந்ததாகவே பார்வைக்குத் தோன்றும். நதியிடைப்பட்ட தீவில் வளர்ந்த தேசிகனுக்கோ எத்திசைச் செல்லினும் எச்சுவைப் பெறினும் அரங்கமே ‘பச்சை’யாக நெஞ்சிலும் நினைவிலும் ஒட்டிக்கொண்டிருக்கிறது. படிப்பை முடித்த கையோடு தேசிகனுக்கு ஒரு வேலையும் கிடைத்துவிடுகிறது, கைத்தலம் பற்றவும் ஒருத்தி தயாராக இருக்கிறாள். எனினும் அவன் இரண்டிலுமிருந்து தன்னைக் கவனமாக விடுவித்துக்கொண்டு அமெரிக்காவில் ஆய்வுப் பட்டம் பெறுவதற்குக் … Continue reading அமெரிக்க தேசி – தமிழ் ஹிந்து விமர்சனம்

மண்ணில் இந்தக் காதல் இன்றி

தவிப்புதான் காதலா? காதல் தவிப்பென்றால் தவிப்பதெதற்கு? அது தெரிந்தால், அத்தவிப்பை தீர்த்திடும் வழிகளை ஆய்ந்து விடை கண்டுவிடலாமோ? தவிப்பைத் தீர்த்துவிட்டால் காதலும் தீர்ந்துவிடுமா? காதல் என்பது அன்பு + காமம் / 2 எனலாம். அன்பும் காமமும் சரிவிகிதத்தில் கலந்து செய்த கலவை உணர்வு. ஏன் என்பதற்கு நீங்களும் நானுமே விளக்கங்களாக முடிவதுமுண்டு. மனத்தைத் தொட்டுச் சொல்லுங்கள் உங்கள் பிறப்பு இருவரிடத்தேயான காமத்தினால் மட்டுந்தானா? அதே இருவரிடத்தேயான காமமற்ற அன்பினால் மட்டும் பிறந்திருப்பீர்கள் தானா? பெற்றது உங்களையோ … Continue reading மண்ணில் இந்தக் காதல் இன்றி

மழைவனத்தினில், மழை நின்ற நாளில்

இறந்து பெற்ற விடுதலையின் களிநயம்  

காதல் கணங்கள்

அலறும் மலரைப் போல அலர்ந்த அருணனைப் போல நீலவண்ணக் குளிரைப் போல நீந்திவரும் நெருப்பைப் போல நேற்று ஒலித்த கனவைப் போல நைச்சிய நிழலைப் போல காதல் கணங்கள். காத்திருந்த கன்னிவெடி போல கால்மாறிய நாட்டியம் போல பொங்கிவிட்ட பொழுதைப் போல புன்னகைத்த புலியைப் போல பகலிற் புகுந்த கள்வனைப் போல புத்தம்புதிய பாக்குவெட்டிப் போல காதல் கணங்கள். சிக்கிமுக்கிச் சிறகைப் போல சிலந்திவலை சீற்றம் போல பரமபத சோபனம் போல பங்குசந்தைப் பதாகை போல பாய்ந்துவரும் … Continue reading காதல் கணங்கள்

விஷ்ணு மார்பின் பாரம் அகன்றது!

சென்ற வருடம் [ Feb 2014 ] விஷ்ணுவின் மார்ப்பைப் பிளந்து என்று கோயில்களினுள் நாம் இன்றும் (என்றும்?) காணும் உதாசீனங்கள் அக்கறையின்மை பற்றிப் புலம்பியிருந்தேன். உதாரணங்களாக அவ்வருடப் பயணங்களில் கண்ட சில காட்சிகளைப் பகிர்ந்திருந்தேன். அவற்றில் ஒன்றான ஸ்ரீரங்கம் கோயில் தாயார் சந்நிதியின் பிரகாரத்தில் ராமானுஜர் கூடத்தின் முகப்பில் தென்பட்ட காட்சியே என் கட்டுரைத் தலைப்பாகியிருந்தது. ‘விஷ்ணுவின் மேல் சிமெண்ட்’ செயல் அந்த வெள்ளி மண்டபம் செப்பனிட உதவிய உபயதாரர் (ஆத்திகர்) பெயர் பலகை வைப்பதற்கான பக்கவிளைவு. எழுதிய … Continue reading விஷ்ணு மார்பின் பாரம் அகன்றது!

நேனோ புத்தகம் – தினமலர் மதிப்புரை

என் நேனோ: ஓர் அறிமுகம் புத்தகத்திற்கான தினமலர் நாளிதழில் வெளியாகியுள்ள மதிப்புரை * பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும், குறிஞ்சி மலரைக் கண்டால் எவ்வளவு மகிழ்வு ஏற்படுமோ, அத்தனை மகிழ்வும், திருப்தியும், இந்த நூலின், 12 அத்தியாயங்களில் இருந்தும் கிடைக்கின்றன. கி.மு., 7ம் நூற்றாண்டில் துவங்கி, 2013ம் ஆண்டு வரை, ‘நேனோ’ தொழில்நுட்ப வளர்ச்சி கண்ட பரிணாம மாற்றங்களும், மைல் கற்களும் இந்த நூலில் பட்டியலிடப்பட்டுள்ளன. எந்தெந்த பொருட்கள், ‘நேனோ’ சார்ந்தவை, எவை ‘நேனோ’ அல்லாதது … Continue reading நேனோ புத்தகம் – தினமலர் மதிப்புரை

கட்டடங்களும் கோபுரங்களும் – கடிதம்

வணக்கம் பெரிய எழுத்தாளர் ஆகி விட்டதால் பதில் அனுப்புவீர்களா என்று தெரியாது. இருந்தாலும், உங்கள் பதிவில் பின்னூட்டப்பெட்டி இல்லாததால், அஞ்சலிலேயே அனுப்புகிறேன். உங்களின் இந்த பதிவை மிகவும் இரசித்தேன். ஆனால் ஒரு குறிப்பு எழுத வேண்டும் என்று தோன்றியது. Function over Form என்ற கட்சியை எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனாலும், Function என்று சொல்லிக் கட்டும் தற்கால கட்டடங்களில் Function ம் இல்லை Form ம் இல்லை (இந்தியாவில், குறிப்பாக பெங்களூரில்). கருப்பு கண்ணாடி போட்டு … Continue reading கட்டடங்களும் கோபுரங்களும் – கடிதம்

தேசிய அளவு அங்கீகாரம்

பூர்வ பீடிகையைப் பொறுத்துக்கொள்ளுங்கள். சொல்ல வரும் விஷயம் ஒரு வரி தான். இந்தியாவில் பல அகடெமிக்கள் உள்ளன. அவற்றில் அறிவியல் பொறியியல் துறை சார்ந்தவை ஆறு. அவற்றில் பொறியியலில் முதன்மையானது இந்திய தேசிய பொறியியல் அகடெமி (Indian National Academy of Engineers - INAE). இவ்வகை அகடெமிக்களில் பொதுவாகத் தங்கள் துறையில் தொடர்ந்து சிறந்து பணியாற்றும் விஞ்ஞானிகள், பேராசிரியர்கள் போன்றோர் அங்கத்தினராய் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அங்கத்தினர் ஆவது இந்த அகடெமிக்களின் அழைப்பின் பேரில் மட்டுமே சாத்தியம். அதாவது … Continue reading தேசிய அளவு அங்கீகாரம்

புத்தகம் – உலகே உன் உருவம் என்ன?

இணையத்தில் எழுதிய பதினைந்து அறிவியல் கட்டுரைகளை ‘உலகே உன் உருவம் என்ன?’ என்கிற தலைப்பில் தமிழினி புத்தகமாய் வெளியிட்டுள்ளது. ஜனவரி 9 தொடங்கும் சென்னை புத்தகக் காட்சியில் கிடைக்கும். விலை, ரூபாய் 100. ஆன்லைனில் வாங்க: உடுமலை தளம் | என்.எச்.எம். ஷாப் அறிவியல் சார்ந்த விஷயங்களைத் தீவிரம் குறையாமல் சற்றே நகைச்சுவையுடன், சாய்வுநாற்காலியில் உங்களைப் புரட்ட வைப்பதே இப்புத்தகத்தில் தொகுக்கப்பட்டிருக்கும் கட்டுரைகளின் நோக்கம். இப்புத்தகத்தை முன்வைத்து வெளியீட்டு விழாவில் பத்ரி பேசியதை விரைவில் கானொளியாய் இணைக்கிறேன். … Continue reading புத்தகம் – உலகே உன் உருவம் என்ன?

ஆசிரியர் தின உரையும் உரைகல்லும்

இம்மாதம் ஆசிரியர் தினத்தன்று சென்னையில் ஒரு பள்ளி விழாவில் தலைமை விருந்தினராய் உரையாற்றும் இக்கட்டை வெற்றிகரமாக எதிர்கொண்டேன். ஃபோனில் ஏற்கெனவே ஆசுவாசப்படுத்தியிருந்தனர்: நீங்க ஆசிரியர்களுக்குதான் சார் உரையாற்றப்போறீங்க; மாணவர்கள் இருக்கவே மாட்டாங்க… பத்து நிமிஷம் பேசினாப் போதும் சார்… தமிழ்லயே பேசலாம்… புக்ஸ்லாம் எழுதிருக்கீங்கலாமே… தமிழ்லயேன்னா, மொத்தமா அதுலயே வேணாம்… சும்மா கலந்துகட்டி பைலிங்குவலா… அதான் நீங்க பிரமாதமா பேசுவீங்கன்னு “ … ” சொன்னாங்களே… இரண்டு மூன்று வருடங்களாய் தெரிந்தவர் மூலம் அழைத்து வந்தார்கள். இம்முறை … Continue reading ஆசிரியர் தின உரையும் உரைகல்லும்

அம்ருதாவில் அறிவியல் 3.0

அம்ருதா இதழில் தொடர்ந்து மூன்றாவது வருடமாக என்னால் அறிவியலை எழுதமுடிவது கலியுகம் செய்த நல்லூழ். தமிழ் புத்தாண்டு இதழில் ‘அறிவியல்’ இதன் அட்டைப்படத்தை அலங்கரிப்பது எனக்குமே ஆச்சர்யம். என்னத்தான் நிதியும் மதியும் ஒத்துழைத்தாலும், ஆரவாரங்களின்றி கலை இலக்கிய அறிவுத்துறை விஷயங்களை தொடர்ந்து பிரசுரித்துவருவதற்கும் ஒரு காதல் வேண்டும். நான் இதுவரை எழுதியிருந்த கட்டுரைகளில் ஒரு தொகுப்பை புத்தகமாக்கினார்கள். முன்பதிவு, லைப்ரரி ஆர்டர் போன்றவை ஓய்ந்து இம்மாதம்தான் இப்புத்தகம் கடைக்கு வந்துள்ளது. அம்ருதா பதிப்பகம் விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ளனர். இன்னும் … Continue reading அம்ருதாவில் அறிவியல் 3.0