மொட்டை வியாபாரம்

நாவிதர் மொட்டை அடித்துவிடத் தயங்குகிறார். சொற்ப வயதாங்கில் எதுக்கு சாரே... கொஞ்சந்தானே சாரே இருக்கட்டுமாகிலே... ரஜினி ஸ்டைலா இருக்கங்கில் யோஜிக்கறன் யாண்... அப்பிடியே நிமிட்டா செதுக்கி விட்டு வைக்கிறனே... ரெம்ப எடுக்காங்கில் லேடிஸுக்குலாம் பிடிக்காது சாரே... நீங்கள் எதுக்கும் உங்கன வீட்டில் மேடத்த ஒருடைம் கன்ஸல்ட் பண்ணி... பின்ன இந்த உன்னி ஒங்களப் பின்னி... ஏதேதோ சாக்குபோக்கு சொல்கிறாரே ஒழிய மழிக்க மறுக்கிறார். முழுவதும் மழித்துவிட்டால் கேசம் வளர்ந்து சிகை மீண்டும் இன்றிருக்கும் அதே நிலைக்கு வருவதற்கு … Continue reading மொட்டை வியாபாரம்

ரிக்கார்டோ ஷாயியும் அருண் நரசிம்மனும்

Riccardo Chailly என்பதை எவ்வாறு உச்சரிப்பது? முதல் பெயரில் நம்பும் உச்சரிப்புத் தர்க்கம் இறுதிப் பெயரில் கவிழ்த்துவிடுகிறது. Riccardo என்பதை அப்படியே வாசித்து ரிக்கார்டோ என்றால், உச்சரிப்பு சரியே. Chailly என்பதை அதே தருக்கப்படி சைலி என்றால் போச்சு. சாய்லீ-யும் இல்லை, ச்சைலி-யும் இல்லை. சில்லி-யும் இல்லை. வானொலி அறிவிப்பில் பிரெஞ்சுப் பெண்மணி Chailly என்பதை ஷாயி… என்கிறார், அதிகாலை மூன்றரை மணி கிரக்கமாய். நமக்கும் ஆசையாகத்தான் இருக்கிறது. கிரக்கமான பிரெஞ்சுப் பெண்குரல் இனி அமையாது என்றாலும் … Continue reading ரிக்கார்டோ ஷாயியும் அருண் நரசிம்மனும்

ஜல்லிக்கட்டு – என் மத்யமர் பார்வையில்

பின்வரும் எண்ணங்கள் ஜல்லிக்கட்டு போராட்டம் ஏன் உருவானது எவ்வாறு இத்தனை விசுவரூபம் எடுத்தது போன்றவற்றை விளக்காது. அதெல்லாம் கெடக்கட்டுமய்யா மொதல்ல நீர் என்ன சொல்லும் அப்பால மேல படிக்கலாமா வாணாமானு முடிவெடுத்துகறேன் என்றால் நான் ஜல்லிக்கட்டு ஆதரவாளன். ஆனால் ஜல்லிக்கட்டு எதிர்ப்பாளன் என்றானாலும் என் மதிபேசி தழுவிய மங்காத மத்யமர் வாழ்க்கையின் எத்தருணத்திலுமே எச்செயல்பாட்டிலுமே எவ்வித இழப்புமில்லை என்பதை அறிந்தவன். * நான் சிறுவனாய் ஜல்லிக்கட்டை ஓரிரு முறை வேடிக்கைப் பார்த்திருக்கிறேன். தஞ்சை ஜில்லாவில் நான் பிறந்து … Continue reading ஜல்லிக்கட்டு – என் மத்யமர் பார்வையில்

இலக்கியம் இசையும் வயது

ஒவ்வொரு கலை இலக்கியப் படைப்பிற்கும் ஒரு வயது உள்ளது எனத் தோன்றுகிறது. அப்படைப்பு தன்னியல்பாய் ஒருமித்து வெளிப்படுத்தும் வயது. அவ்வயதோடு நாம் அதை அணுகுகையிலேயே அனைத்துப் பரிமாணங்களோடும் அப்படைப்பு முழுவதுமாய்த் திறந்துகொள்கிறது எனலாம். சமவயதினரோடான நட்பிலன்றோ ஆளுமையை உரித்து உளமாற உறவாடும் வாய்ப்பு அதிகமாகிறது. இலக்கியப் படைப்பின் வயது நமக்குக் காலத்தால் ஆகியிருக்கும் வயதால் ஆவதன்று. அனுபவங்களினால் வருவது எனலாம். ஆன்னா கரனீன்-னில் இருந்து அதிகம் பெருவதற்கான வயது ஒரு டப்ளினர்ஸ்- வழங்கும் அனைத்தையும் பெருவதற்கான வயதைவிடப் … Continue reading இலக்கியம் இசையும் வயது

இசை அறிதலின் பிழையான முன்மாதிரிகள்

ஜெயமோகன் தளத்தில் அருண் என்று ஒருவர் இன்று கேள்வி கேட்டிருக்கிறாரே, நீ தானா? அன்பர் போன் செய்தார். நான் எதற்கு எனக்குத் தெரியாதை அவரிடம் போய்க் கேட்கப்போகிறேன், அதற்குப் பதில் கூறுவதைத் தவிர அவருக்கும்  வேறு வேலைகள் இல்லையா… நினைத்துக்கொண்டாலும், என்ன கேள்வி? என்ன விஷயம்? என்கிறேன். பேஸ்புக்கே பற்றி எரிகிறதே… என்னனு தெரியாதா என்றார் அன்பர். இல்லையே, நீங்க பேஸ்புக்ல தலைய வுட்டுனுக்குறீங்க, நான் ஸென்ஹெய்ஸர் ஹெட்போனில் வுட்டுகினு எம்பாட்டுக்கு பாட்டு கேட்னுகிரேன் என்கிறேன். அன்பர் … Continue reading இசை அறிதலின் பிழையான முன்மாதிரிகள்

காதாசப்தஸாதி: ப்ராக்ருதி மொழிக் காதல் கவிதைகள்

ஹாலா இரண்டாம் நூற்றாண்டில் ஆண்ட சாதவாஹன அரசன் [ https://en.wikipedia.org/wiki/Hāla ]. கவிஞன் அல்லது கவிதையில் நாட்டமுள்ளவன். காதாசப்தஸாதி என்பது இவ்வரசன் (மஹாராஷ்ட்ரிய) ப்ராக்ருதி மொழியில் தொகுத்த காதல் கவிதைகள். சுமார் 700 சிறு கவிதைகள். அதான் சப்த ( = 7). காதா என்றால் பாடல். இந்தியப் பிரதேசத்தின் தொன்மையான கவிதைத் தொகுப்பு நூல்களில் ஒன்று. ஹிந்தி, மராத்தி ஜெர்மன் மொழிகளில் நூறு வருடங்களுக்கும் முன்பாகவே மொழியாக்கப்பட்டுப் பெயரெடுத்தவை. வாய்வழியே அறிவுச்சேகரம் செய்த மரபானதால் இக்கவிதைகளில் … Continue reading காதாசப்தஸாதி: ப்ராக்ருதி மொழிக் காதல் கவிதைகள்

ஏன் எழுதுகிறேன்?

பதாகை இணைய சஞ்சிகையில் வெளியாகியுள்ள என் கட்டுரையின் மீள்-பதிவு. * ஏன் எழுதுகிறேன்? வருகிறது, செய்கிறேன். சுவாசம் போல. மறக்கையில் நிற்கும். எழுத்தும். எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்லருந்தே… எனத் தொடங்குகிறது ஆற்றல் பானத்திற்கான ஓர் விளம்பரப் பேச்சு. எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்லருந்தே… நான் எழுதி வருகிறேன். வீட்டு முற்றத்தின் செம்மண் படிக்கோலத்தின் மீது நெல் கொட்டி, அதில் கிழக்குப் பார்த்துத் தாத்தாவின் மடியில் இருந்தவாறு சூரியன் சாட்சியாக முதல் எழுத்தை ‘அ’ என விரலினால் … Continue reading ஏன் எழுதுகிறேன்?

அழைப்பும் பிழைப்பும்

வேலை என்பது பிழைப்பிற்காக செய்யப்படுவது எனலாம். இந்த வேலை பிடித்தமானதாக அமைந்தால் நலம். வருமானம் சற்று குறைவானதாக இருந்தாலும் உளைச்சல் இன்றிச் செய்யலாம். ஆசிரியர் வேலை போல. சுய தொழில் முயற்சிகள் போல. தேவையான வருமானத்திற்கு ஒரு நாளில் வேலைக்கென்று செலவிடும் நேரம் குறைவானதாக இருந்தாலும் நலம். பிடிக்காவிட்டாலும் சுருக்க செய்து முடித்துக்கொள்ளலாம். ஆசிரியர் வேலை போல. திரைப்படங்களுக்கு வசனம் எழுதுவதைப் போல. அடுத்தபடியாக ஓரளவே பிடித்திருந்தாலும் தேவையான வருமானத்திற்கு அதிக நேரம் செய்தாகவேண்டிய வேலைகள் உள்ளன. … Continue reading அழைப்பும் பிழைப்பும்

கட்டடங்களும் கோபுரங்களும்

எய்ன் ராண்ட் புத்தகங்கள், கருத்துகள் எதையுமே இதுவரை வாசித்திராத புத்திசாலி வாசகர்கள் அடுத்த மூன்று பத்திகள் தவிர்த்து வழக்கமான அவரவர் கவனம் அவகாசம் அவசரம் பொறுத்து கட்டுரையை நேரடியாக வாசிக்கலாம். * அவர்களின் ரத்தக்கொதிப்பை அதிகரிக்க இக்கலிகால உலகில் அமெரிக்காவில் கூட பல அரைகுறைத்தனங்கள் பொதுநலச் சேவையாய் அறிவுஜீவியல்லாதவர்களால் அன்றாடம் நடந்தேறுவதால் இக்கட்டுரையையும் வாசிக்கவைப்பானேன் என்கிற சுயநலமற்ற altruist மனநிலையில் ‘எய்ன் ராண்ட் பக்தர்கள் வாசிக்க வேண்டாம்’ என்ற எச்சரிக்கை வாக்கியத்துடந்தான் கட்டுரையைத் தொடங்கவேண்டும் என்றிருந்தேன். ஆனால், … Continue reading கட்டடங்களும் கோபுரங்களும்

பேராசிரியத்துவம்

நாளைக்கு ஒரு கிளாஸ் எடுப்பியா? அப்பறம் ஃப்ரீதானே, போரடிக்காதா? இப்பதான் செமஸ்டர் முடிஞ்சிருத்தே, ஃப்ரீதானே, தினம் என்ன பண்ணுவ? கிளாஸும் கெடயாது, சும்மாதானே போய்ட்டுவருவ? ஜாலியான பொழப்புடா ஒனக்கு. ஒரே சப்ஜக்ட்ட அதே கிழிஞ்சுபோன நோட்ஸ வெச்சு எடுத்தா போரடிச்சுராது? பி.எச்.டி. ரிஸர்ச்சுன்னா, அதுனால என்ன யூஸ்? நீ ஏதாவது புதுசா கண்டுபிடிச்சிருக்கியா? நீ விஞ்ஞானியா, வாத்தியாரா? உயர்கல்வி நிறுவனத்தில் என் வேலைப் பெயரைச் சொன்னதும் அடுத்து கேட்கப்படும் கேள்விகள் மேற்படி வகையே. அப்போது அறிமுகமானவரும், அன்றாடம் … Continue reading பேராசிரியத்துவம்

விஷ்ணுவின் மார்பைப் பிளந்து

விஷ்ணு நரசிம்ம அவதாரத்தில் ஹிரண்யகசிபுவின் குடலைக்கிழித்து மாலையாகப் போட்டுக்கொண்டார். லக்ஷ்மி பிராட்டியை தன் மார்பில் ஏற்றுக்கொண்டுள்ளார். பிரம்மனை நாபிக்கமலத்திலிருந்து தாமரை மேல் ஜனித்தார். இதெல்லாம் பழங்கதை. விஷ்ணுவின் மார்பைப் பிளந்தவர் யார் என்று சொல்ல முடியுமா? தெரியவில்லையா. கீழே படத்தில் பாருங்கள். மதுநின்ற தண்டுழாய் மார்வன் என்று பேயாழ்வாரால் பாடப்பட்ட, ரீயின்ஃபோர்ஸ்டு காண்க்ரீட்டினால் நச்சக் என்று பிளக்கப்பட்ட, விஷ்ணுவை. ஸ்ரீரங்கம் அரங்கன் திருக்கோயில் தாயார் சந்நிதி பிரகாரத்தில், பங்குனி உத்திர வெள்ளி மண்டபத்தில் உள்ள தூணில் சில … Continue reading விஷ்ணுவின் மார்பைப் பிளந்து

குரு வந்தனம்

ஒன்றைப் பூஜ்ஜியத்தால் வகுத்தால் என்ன கிடைக்கும்? பள்ளியில் எங்களை கணிதம் பயில்விக்கும் உபாத்தியார் கேட்டார். சாக்பீஸ் தீற்றல்களால் வெளிறிப்போயிருந்த கரும்பலகையை நோக்கி அங்குமிங்குமாய் விரவியிருந்த அரைபெஞ்சுகளில், வியர்க்கும் முழங்கால்களை முட்டிக்கொண்டு அரைநிஜாரில் நாங்கள். அனைவரும் விடை என நினைத்ததைக் குரலெடுத்தோம், பூஜ்ஜியம் என்று. கணக்கு வாத்தியார் வாமன ரூபம். ஆர்.எஸ்.வீ. சார் என்று மரியாதையில் பெயரும் சுருக்கிவரையப்பட்டவர். முழுப்பெயர் எனக்குத் தெரியாது. அமெரிக்க மேற்படிப்பில் முதல்நாளில் குருவை ழோஸெ என்று ஒருமையில் விளிக்கக்கற்ற இன்றும். பூஜ்ஜியம் என்கிற … Continue reading குரு வந்தனம்

ஸ்ரீரங்கம் களை

ஸ்ரீரங்கம் பழைய ஊர். வண்டின முறலும் சோலை மயிலின மாடும் சோலை. மாற்றங்களை வரவேற்றபடி. இருபத்தியைந்து வருடங்கள் நான் வளர்ந்திருக்கிறேன், அதன் வீழ்ச்சியுடன். இன்றும் விட்டுவிடாமல் தொட்டுக்கொள்வதற்கு மட்டுமான உறவு. பழைய ஞாபகங்கள். புதிய ரணங்கள். நண்பிக்கு மேலே, காதலிக்கு கீழே. மனைவியாகிவிடமாட்டாள் என்பதில் ‘அப்பாடா, தப்பித்தோம்’ என்கிற நிம்மதியில்லை. மனைவியானாலும் அறுபதாம் கல்யாணத்தில்தான் என்பதில் இன்றளவு நிம்மதியே. ஸ்ரீரங்கமும் கிட்டத்தட்ட இதையேதான் சொல்லும், என்னைப் பற்றி. பல்லவனில் லால்குடி வந்ததுமே எழுந்து (சில முன்ஜாக்கிரதை முத்தண்ணாக்கள் … Continue reading ஸ்ரீரங்கம் களை

நினைவோடை: பேராசிரியர் ஜாக் ஹோல்மன்

பேராசிரியர் ஜாக் ஹோல்மன் வெப்பவியல் துறையில் ஒரு முன்னோடி. உங்களில் சிலர் அறிந்திருக்கலாம், கேள்விப்பட்டிருக்கலாம். அவருடைய ஹீட் டிரான்ஸ்ஃபர், தெர்மோடைனமிக்ஸ் போன்ற வெப்பவியல் பாட புத்தகங்கள் கடந்த அறுபது வருடங்களுக்கும் மேலாக பொறியியல் மாணவர்கள் மற்றும் ஆய்வாளர்களிடையே மிகப்பிரபலம். மே 1, 2013 அன்று இயற்கை எய்தினார். நினைவாக, அவருடனான அனுபவங்கள் சிலவற்றை பதிவுசெய்கிறேன். முனைவர் பட்டப்படிப்பினூடே நான் பேராசிரியர் ஹோல்மனிடம் ஆசிரிய உதவியாளனாக நான்கு வருடம் (1998 – 2002) இருந்தேன். ஒரு முறை உராய்வு … Continue reading நினைவோடை: பேராசிரியர் ஜாக் ஹோல்மன்

டிஜிட்டலில் செதுக்கிய தலையா

இரண்டு நாள்கள் முன்னர் மொட்டை அடித்துக்கொண்டேன். ஏன் என்று காரணம் கேட்டால், இப்படிச்சொல்லலாம். சலூனுக்குச் சென்று நம் முடியையும் கொடுத்து நம் காசையும் கொடுப்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட சமூகச் சோகங்களில் ஒன்று. அதட்டிக் கேட்டால் ஒருக்கால் வெட்டியதை எடுத்துச்செல்லுங்கள் என்று திருப்பிக்கொடுக்கலாம். பிறகும், நம்மிடம் முன்னர் இருந்தது இப்போதும் நம்மிடமே உள்ளது, ஆனாலும் காசை கொடுக்கவேண்டியுள்ளதே என்று சோகம் மீளும், நீளும். எப்படியும் கொடுக்கப்போகும் காசிற்கு ‘மிகுதியான பலனாய்’ இருக்கட்டுமே என்றும், இப்படிச் செய்தால் மீண்டும் சலூன் செல்வதற்கு … Continue reading டிஜிட்டலில் செதுக்கிய தலையா

இது விஷ்ணுபுரம் விமர்சனமல்ல

தேற்றுவாய் (சரியாகத்தான் எழுதியிருக்கிறேன்): ஏற்கனவே ஒருமுறை விஷ்ணுபுரம் அறிமுகம் என்று மகளை விஷ்ணுபுரம் நாவலின் பின்னட்டை நாலுவரி மிகையை வாசிக்கச்சொன்னதை ஒரு அனுபவப்பகிர்வாய் வெளியிட்டேன். இது யோக்கியமான விமர்சனமல்ல என்று பதில் கிடைத்தது (விஷ்ணுபுரம் ஆசிரியரிடமிருந்து அல்ல). அது விமர்சனமே இல்லையே, பிறகுதானே அதன் யோக்கியத்திற்கான வழக்கு என்றாலும், தமிழ்நாட்டின் நகைச்சுவை உணர்வு தட்டுப்பாட்டில் இப்படிக் ‘கடுகு’ அளவேனும் நானும் அடிவாங்குவது சகஜம். எதற்கு இரண்டாம் முறையும் பொல்லாப்பு என்றே இக்கட்டுரையின் தீவிரம் வெளிப்படையாகத் தெரியுமாறு நகைச்சுவையாகத் … Continue reading இது விஷ்ணுபுரம் விமர்சனமல்ல

காப்பாற்றப்படவேண்டிய தமிழ்நாட்டின் சுவரோவியப் பொக்கிஷங்கள்

சித்திரக்கலையில் மியூரல்ஸ் என்றால் சுவரோவியங்கள் அல்லது சுவர்ச் சித்திரங்கள். கோயில்களிலும் குகைகளிலும் வரையப்பட்டுள்ள பழங்காலச் சுவரோவியங்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு, இந்தியாவிலேயே ராஜஸ்தானை அடுத்து இரண்டாவது இடத்தை வகிக்கிறது. ஆசியாவில் இலங்கைக்கு அடுத்து புத்த சமண சைவ மதங்களின் சரித்திர முக்கியத்துவம் பெற்ற பல ஓவியங்களைக் கொண்டுள்ளது. பல்லவர்கள், விஜயநகர ராயர்கள், தொடர்ந்து நாயக்கர்கள், பாண்டியர்கள், சோழர்கள், சேரர்கள் என்று ஏழாம் நூற்றாண்டில் இருந்து பதிநேழாம் நூற்றாண்டு வரை ஆயிரம் வருடங்களுக்கும் மேலாக 140 தமிழ்நாட்டுக் கோயில்களில் மேல், … Continue reading காப்பாற்றப்படவேண்டிய தமிழ்நாட்டின் சுவரோவியப் பொக்கிஷங்கள்