நேனோ: ஓர் அறிமுகம் – கட்டுரை 7 – நேனோ அலுமினியமும் ராக்கெட் அறிவியலும்

இங்கு சற்று ராக்கெட் அறிவியல் பேசுவோம். தொடர்ச்சியாக, நேனோ அளவில் செய்யப்பட்ட அலுமினா துகள்களினால் ராக்கெட் எவ்வாறு வெடிப்பதிலிருந்து தடுக்கப்படுகிறது என்பதையும் அறிந்துகொள்வோம். தீபாவளி ராக்கெட்டில் குச்சியின் முனையில் எரிபொருள் மருந்தும், அதை எரிக்க நெருப்பூட்ட இணைந்த திரியும் இருக்கும். பாட்டிலில் சொருகி பற்றவைத்தால் வானத்திலோ வீட்டுக் கூரையிலோ தவ்வும். இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் போன்றவை செயற்கைக்கோள்களை வானத்தில் ஏற்றுவதற்காகத் தயாரிக்கும் பிரம்மாண்டமான ராக்கெட்டுகள் சிக்கலானவை. பற்றவைத்தால் இவ்வகை பிரம்மாண்ட ராக்கெட்டுகளும் மங்கள்யான் போல செவ்வாய் … Continue reading நேனோ: ஓர் அறிமுகம் – கட்டுரை 7 – நேனோ அலுமினியமும் ராக்கெட் அறிவியலும்

இசை அறிதலின் பிழையான முன்மாதிரிகள்

ஜெயமோகன் தளத்தில் அருண் என்று ஒருவர் இன்று கேள்வி கேட்டிருக்கிறாரே, நீ தானா? அன்பர் போன் செய்தார். நான் எதற்கு எனக்குத் தெரியாதை அவரிடம் போய்க் கேட்கப்போகிறேன், அதற்குப் பதில் கூறுவதைத் தவிர அவருக்கும்  வேறு வேலைகள் இல்லையா… நினைத்துக்கொண்டாலும், என்ன கேள்வி? என்ன விஷயம்? என்கிறேன். பேஸ்புக்கே பற்றி எரிகிறதே… என்னனு தெரியாதா என்றார் அன்பர். இல்லையே, நீங்க பேஸ்புக்ல தலைய வுட்டுனுக்குறீங்க, நான் ஸென்ஹெய்ஸர் ஹெட்போனில் வுட்டுகினு எம்பாட்டுக்கு பாட்டு கேட்னுகிரேன் என்கிறேன். அன்பர் … Continue reading இசை அறிதலின் பிழையான முன்மாதிரிகள்

காதாசப்தஸாதி: ப்ராக்ருதி மொழிக் காதல் கவிதைகள்

ஹாலா இரண்டாம் நூற்றாண்டில் ஆண்ட சாதவாஹன அரசன் [ https://en.wikipedia.org/wiki/Hāla ]. கவிஞன் அல்லது கவிதையில் நாட்டமுள்ளவன். காதாசப்தஸாதி என்பது இவ்வரசன் (மஹாராஷ்ட்ரிய) ப்ராக்ருதி மொழியில் தொகுத்த காதல் கவிதைகள். சுமார் 700 சிறு கவிதைகள். அதான் சப்த ( = 7). காதா என்றால் பாடல். இந்தியப் பிரதேசத்தின் தொன்மையான கவிதைத் தொகுப்பு நூல்களில் ஒன்று. ஹிந்தி, மராத்தி ஜெர்மன் மொழிகளில் நூறு வருடங்களுக்கும் முன்பாகவே மொழியாக்கப்பட்டுப் பெயரெடுத்தவை. வாய்வழியே அறிவுச்சேகரம் செய்த மரபானதால் இக்கவிதைகளில் … Continue reading காதாசப்தஸாதி: ப்ராக்ருதி மொழிக் காதல் கவிதைகள்

மூதாதையர் குரல்

ஹலபீடுவில் இருந்து பெலவாடி செல்லும் சாலையில் வழி தெரியாமல் எங்கள் வாகனம் திணறிய அவகாசத்தினுள் திடமான கைத்தடி ஒலியுடன் இவள் தோன்றினாள். நின்று நிமிர்ந்து நகைத்து நாலு சொற்கள் நவின்று நிமிராது நடந்து சென்றாள். பார்வையில் நிலைபெற்றதை நோக்கி. எங்களுக்கும் பெலவாடி கோயில் காலங்கடந்து காட்சிபட்டது.

இயற்கையோவியம்

கடந்த சில நாட்களாக மேற்குத்தொடர்ச்சி மலைகளுக்கு இப்புறமும் அப்புறமுமாக இனிமையான பயணம். அவகாசமேற்படுத்தி ஓரிரு அனுபவக்குறிப்புகளையாவது எழுதிவைக்க வேண்டும்தான்... மாதிரிக்கு ஓர் இயற்கையோவியம் (ஹாஸனில் இருந்து தர்மஸ்தலா செல்லும் வழியில்). தற்படம் எடுப்பதைத் தவிர்ப்பதால், (வரவிற்கும் அனைத்துப் படங்களுக்கும்) என் அமெச்சூர் கேமிரா காண்பவற்றினூடே தனித்திருக்கும் 'மாடல்' எனும் பெரும் பொறுப்பைப் பயணத்தொடக்கத்திலேயே தன் தலையில் ஏற்றுக்கொண்டுக் கடமையாய்க் கடைசிவரைச் செயல்படுத்தியவர் கவிஞர் மகுடேஸ்வரன் -- அவர் இப்படத்துடன் வெளியிட்டுள்ள பதிவு.

அகத்திகம்

என்னை நம்புகிறாயா என்று மனைவி கேட்கிறாள். தக்க பதில் அளிக்கிறேன். அதையே தாய் கேட்கிறாள், தக்க பதில் அளிக்கிறேன். மனைவியை நம்புகிறாயா என்று தாய் வினவினால், அது உனக்கெதற்கு என்கிறேன். என்னை நம்புகிறாயா என்று மனிதன் கேட்கிறான். தக்க பதில் அளிக்கிறேன். அதையே இறைவன் கேட்கையில் தக்க பதில் அளித்துக்கொள்கிறேன். இறைவனை நம்புகிறாயா என்று மனிதன் வினவுகையில் அது உனக்கெதற்கு என்றே கூறுவேன்.

அச்சுவை பெறினும்… வாசகி கடிதம்

தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்றத் தீ என்று எங்கோ தமிழ்ப் பால் ஊட்டி வளர்த்திட்டதால், தமிழ்  தாய்மொழியாய் ஆனதில் பெருமையும் பெருமிதமும் கொண்ட “ழ”கரத்தை “ல” என்றும் “ள” என்றும் யாரேனும் கொல்லும் போது நியாயச் சீற்றம் அடையும் சாதாரணத் தமிழச்சி நான். விமர்சனம் செய்யும் தகுதி இல்லையென அறிந்து (அச்சுவை பெறினும்... நாவலைப் பற்றிய) சில கருத்துகளையும் எண்ணங்களையும் மட்டுமே பகிர்கிறேன் இங்கே. நன்றியும் வாழ்த்துகளும்: தமிழிலே எண்ணங்கள் … Continue reading அச்சுவை பெறினும்… வாசகி கடிதம்

அறிவியலை உளறல் செய்தியாக்குவது எப்படி?

சாதாரண அறிவியல் கூற்றை உளரல் செய்தியாக்குவது எப்படி? இன்றைக்கான உதாரணம் ஒன்றை மட்டும் வழங்குகிறேன். இயற்பியலாளர்கள் பின்வரும் தலைப்பு, சுருக்கம், உள்ளடக்கம் கொண்ட ஒரு கட்டுரையை எழுதுகிறார்கள். (கட்டுரையின் சுட்டி:  http://dx.doi.org/10.1088/0143-0807/37/5/055001) அதைப் பற்றிய நாளிதழ் செய்தியை வழங்க, இவ்வாறான தலைப்பைத் தேர்வு செய்யவேண்டும். Mumbai physicists uncover link between Lord Shiva, Mona Lisa 'மும்பாய் இயற்பியலாளர்கள் மோனலிஸாவிற்கும் இறைவன் சிவபெருமானுக்கும் உள்ளத் தொடர்பைத் திறக்கிறார்கள்.' வாசித்ததுமே மகிழ்ச்சியை வெளிப்படுத்த இந்தியன் என்று காட்டிக்கொள்ளவேண்டிய … Continue reading அறிவியலை உளறல் செய்தியாக்குவது எப்படி?

மதிநல கணம்

‘மணி என்ன?’ என்பவளிடம் ‘அதைத் தெரிந்துகொள்ளும் வசதி இதன் ஓரத்தில் இல்லை’ என்கிறேன், வாசித்துக்கொண்டிருக்கும் புத்தகத்திலிருந்து தலைதூக்கி. கையில் மதிபேசியற்ற மற்றொரு மதிநல கணத்தில்.

தமிழ் இலக்கிய மரபின் அச்சுவார்ப்புகள்

பின்வருவனவற்றில் ‘|’ குறிக்கு இடப்புறம் அனைத்தும் ஒரு கட்சி, வலப்புறம் எதிர்க் கட்சி. கட்சிகள் எவை என்பதை இறுதி வரியில் விளக்கியுள்ளேன். தமிழ் எழுத்தாளனின் புனைவுலகில் தொடங்குவோம். ஏழை | பணக்காரன் (இதன் வகையறா வீட்டுவாசி | அடுக்ககவாசி நடப்பவன் | காரில் செல்பவன் பணியாள் | பணி கொடுத்தவன் பாட்டாளி | பன்னாட்டு நிறுவன அதிகாரி வேலையில்லாதவன் | மேலதிகாரி பீச்சில் சுண்டல் விற்பவன் | அதை வாங்குபவன் இன்ன பிற…) கிராமத்தவன் | நகரத்தவன் … Continue reading தமிழ் இலக்கிய மரபின் அச்சுவார்ப்புகள்

மற்றொரு இந்து கிழமையில்

காலை எழுந்ததும் பேஸ்ட் ப்ரஷ் வைத்துப் பல் தேய்த்து வாஷ்பேஸினில் உமிழ்வது, பைஜாமாவில் நின்றவாக்கில் கம்மோடில் உச்சா அடிப்பது, பிறகு மின் அல்லது எரிவாயு அடுப்பில் பாக்கெட் பால், கடையில் வாங்கிய காபிப்பொடி, சக்கரை கொண்டு தயாரித்து எச்சை பட எவர்சில்வர் லோட்டாவில் குளிக்காமல் சூடாய் காபி குடிப்பது போன்ற என்னுடைய செயல்களின் அடிப்படைக் குற்றமின்மையை உலகெங்கிலும் வியாபித்துள்ள சக இந்துத்தானர்களிடம் அன்றைக்கு மட்டுமேனும் நிலைநாட்டுவதற்கான தத்துவ தரிசன தர்க்கங்களைக் குறைந்தது ஐயாயிரம் வருடங்கள் பின்னாலிருந்துத் தொடங்க … Continue reading மற்றொரு இந்து கிழமையில்

டுவிட்டர் அறிவியல்

டுவிட்டரில் அறிவியல் எழுத முடியுமா -- விவாதிக்க முடியுமா அல்ல, எழுத முடியுமா -- என்று 2009-2010இல் ஆங்கிலத்தில் முயன்று பார்த்துள்ளேன். தமிழிலும் முடியும். இவ்வாறு நிலையான எவ்வேகமும் ஓய்வே தடைபடும்வரை. நாயின் வள் விசையே ஓடும் நிறையின் முடுக்கமாகும். அது உனைத் தொடாமல் நீ அதைத் தொட முடியாது. #NewtonsLaws — அருண் நரசிம்மன் (@srirangamarunn) June 30, 2016   மனிதனுக்குக் காணல் எனும் செயல் சாத்தியப்படும் அண்டங்களில் காண்பதற்கு ஆயிரம் கோடிச் சூரியன்கள் … Continue reading டுவிட்டர் அறிவியல்

நேனோ: ஓர் அறிமுகம் – கட்டுரை 6 – நேனோ தொழில்நுட்பம்: தொட்டால் தொடுதிரைப் பூ மலரும்

கணினி சி.ஆர்.டி. திரையில் தொடங்கி, கடைகளின் பில் போடும் மெஷின், சூதாட்ட ஸ்லாட் மெஷின்கள், பாம் பைலட், ஸ்மார்ட் ஃபோன், அட்டை கணினி என அநேகமாக அனைத்து மின்திரைகளுமே இன்று விரல்களால் தொடுதிரைகளாகிவிட்டது. ஐபாட், ஐஃபோன், ஐ.நா., ஐயா என்று அனைவருமே சற்று அழுத்தினால்தான் விழிக்கிறார்கள். நான்கு வெவ்வேறு தொழில்நுட்பங்களைக் கொண்ட தொடுதிரைகள் – (touch screens) சந்தையில் உலவுகின்றன. பிரபலமானவை இரண்டு: ரெஸிஸ்டிவ் டச், கப்பாஸிட்டிவ் டச். இன்ஃப்ராரெட் (infrared), அக்கௌஸ்டிக் (acoustic) என மேலும் … Continue reading நேனோ: ஓர் அறிமுகம் – கட்டுரை 6 – நேனோ தொழில்நுட்பம்: தொட்டால் தொடுதிரைப் பூ மலரும்

தற்படங்கள்

உணர்வுகளுடன் ஒன்றறக் கலந்த நினைவுகளாகும் கணங்களைக் காட்சியாக மட்டுமே வடிகட்டிச் சேர்ப்பது வாழ்வின் சோகம். சில மறக்கமுடியாத கணங்களாவது மனச்சித்திரமாய் வாழ்ந்திருக்கட்டுமே. தற்படக் கேமிரா தன்னுறையினுள்ளேயே தங்கட்டும்.

களி(மண்)காலர்கள்

பெரும்பாலும் அக்கப்போர்தான். அவசியம் வாசிக்கலாம். * இருபது வருடங்களுக்கு மேலாக எழுதிய பின்னர் இன்று பிரபலம் என்று அவரைச் சந்திப்போரால் அறியப்படும் ஒரு எழுத்தாளருக்குப் பக்கவாட்டில் தொன்னூறு டிகிரி கோணத்தில் நடந்து முடிந்த புத்தகக் காட்சியில் ஒரு கடையில் அமர்ந்திருக்க நேர்ந்தது. அவருக்கு அந்தப் பக்கம் இருக்கையில் முகநூல் பிரபலம் என்று கருதப்படுபடும் ஒருவர் வந்து அமர்ந்தார். இவரது சீரான எழுத்தும் புத்தகங்களாய் வந்துள்ளது. இருபதாயிரத்திற்கும் அதிகமான லைக்குகள் சம்பாதித்திருப்பதைப் பற்றியும் தொடர்பான சில பல பேச்சுக்களாகவும் … Continue reading களி(மண்)காலர்கள்

நேனோ: ஓர் அறிமுகம் – கட்டுரை 5 – நேனோ பொருள்கள்: கிரஃபீன் தகடு, கரி-குழாய், கரி-உருண்டை

கிரஃபீன் (Graphene) என்பது ஒரு அணு பருமனால் ஆகிய உயரத்துடன், கார்பன் அணுக்கள் பக்கவாட்டில் கைகோர்த்து அமைக்கும் நேனோ-அளவு அணிவரிசை. பரப்பு சில சென்டிமீட்டர்வரை கூடச் செல்லலாமாம். இப்பொருளை 2004இல் கண்டுபிடித்ததற்காக 2010 இயற்பியல் நோபல் இங்கிலாந்தின் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆண்ட்ரீ கெய்ம் (Andre Geim) கொன்ஸ்டெண்ட்டின் நொவோஸெலெவ் (Konstantin Novoselov) இருவருக்கும் அளிக்கப்பட்டுள்ளது. இரு பரிமாண கிரஃபீன் பற்றிய “நிலமதிரும் பரிசோதனைகள்” நிகழ்த்தியதற்காக இப்பரிசு என்கிறது நோபல் பரிந்துரை. இளசுகளுக்கு மார்ஃபீன் போல, இயற்பியலாளர்களுக்கு … Continue reading நேனோ: ஓர் அறிமுகம் – கட்டுரை 5 – நேனோ பொருள்கள்: கிரஃபீன் தகடு, கரி-குழாய், கரி-உருண்டை

நேனோ: ஓர் அறிமுகம் – கட்டுரை 4 – நேனோ பொருள்: நேனோ திரவம் தேடி

நேனோ திரவம் அல்லது நேனோ பாய்மம் (nanofluids) என்பது சமீப சில வருடங்களாய் ஆய்வுச்சாலைகளில் புழங்கும் பொருள். ஏற்கெனவே அறிமுகம் செய்துகொண்டபடி, நேனோ மீட்டர் என்பது ஒரு மீட்டரில் ஒன்றின் கீழ் நூறு கோடி பாகம். ஒரு அணுவின் அளவைவிட பத்துமடங்கே அதிகம். அப்படியென்றால் நேனோ-திரவம் என்பது நிச்சயமாக இருக்கிறதா இல்லையா என்று கண்ணுக்கே தெரியாத நேனோ-அளவில் உள்ள திரவமா? இருக்காது என்று அனுமானிக்கலாம். அப்படியென்றால் நேனோ திரவம் நேனோ-அளவு துகள்களால் ஆனது என்று கூறலாமா? அதுவும் … Continue reading நேனோ: ஓர் அறிமுகம் – கட்டுரை 4 – நேனோ பொருள்: நேனோ திரவம் தேடி

அச்சுவை பெறினும்… நாவல்

அச்சுவை பெறினும்... என் இரண்டாவது நாவல். தமிழினி வெளியீடு. ஜூன் 1 முதல் நடக்கவிருக்கும் சென்னை புத்தகக் காட்சியில் தமிழினி நிலையத்தில் கிடைக்கும். பிறகும், வழக்கம்போல, வாசிக்க மனமிருப்போருக்கு உலகின் மூலை முடுக்கிலெல்லாமும் கிடைக்கும். புத்தக வடிவில் வாசிப்பதற்கு ஓர் விலையை அளிக்கவேண்டியிருப்பதைத் தவிர்க்க இயலாது. [தொடர்பு: தொ.பேசி எண் 9344290920] * தத்தமது சதிபதிகளுடன் அமெரிக்கா பெங்களூர் என்று இல்லறம் பேணும் இருவர் மீண்டும் காதலர்களாய்த் தாங்கள் வளர்ந்த சிற்றூரில் இரு தினங்கள் சந்தித்துக்கொள்ள நேர்ந்தால்? இல்புறக் … Continue reading அச்சுவை பெறினும்… நாவல்

நேனோ: ஓர் அறிமுகம் – கட்டுரை 3 – நேனோ-விளைவு – அறிவியலும் மிகையும்

நேனோ ஓர் அறிமுகம் கட்டுரை வரிசையில் சென்ற வாரம் வெளியான தங்கத்தின் நிறம் நீலம் கட்டுரையை வாசித்துக்கொள்ளுங்கள். இப்போது, “நேனோ வரலாறு” கட்டுரையின் பிற்பகுதியில் ஏற்கெனவே குறிப்பிட்ட ரோமானியர்கள் நான்காம் நூற்றாண்டில் வடிவமைத்த லைஸர்கஸ் கோப்பையை (Lycurgus Cup) எண்ணிப்பாருங்கள். அதில் நிகழ்ந்தது மேலே விளக்கியுள்ள தங்க நிறமாற்ற விளைவுதான். வெளியிலிருந்து பார்க்கையில் ஒரு நிறத்திலும், உள்ளே விளக்கேற்றி ஒளிரூட்டினால் வேறு நிறத்திலும் தெரிந்தது பரப்பினில் இருந்த நேனோ தங்கத்தினால். செயல்வடிவமாய் கோப்பையை ரோமானியர்களால் அன்றே வடிவமைக்க … Continue reading நேனோ: ஓர் அறிமுகம் – கட்டுரை 3 – நேனோ-விளைவு – அறிவியலும் மிகையும்

நேனோ: ஓர் அறிமுகம் – கட்டுரை 3 – நேனோ-விளைவு: தங்கத்தின் நிறம் நீலம்

“நேனோ நோநோ” பகுதியில் குறிப்பிட்டவகையில், பொருட்களில் நேனோ-மீட்டர் அளவுகளில் நிகழும் சில நேனோ அறிவியல் விளைவுகள் உள்ளன. அணுக்கூட்டணி மோட்டார்கள், அணுக்கூட்டணி சுவிட்சுகள், ஒரே எலக்ட்ரானில் அதன் இருநிலைகளில் சுழற்சியின் மூலம் தகவல் சேமித்தல், மருந்துகளை நேனோ-அளவில் பொடிகளாக்கி நேரடியாக இழையங்களில் (tissue) உயிரணுக்களில் (cells) சேர்த்தல் போன்றவை நேனோ-அறிவியல் தளத்தில் இயங்குபவை. மரபணு-சில்லுகள் (gene-chips) வாயு அறிவான்கள் (gas sensors), அதிக்குளிரூட்டம் (hyperthermia) போன்றவற்றில் நேனோ-தொழில்நுட்பத் தேர்ச்சி இன்று நமக்கு உள்ளது. நேனோ வரலாறு பகுதியில் … Continue reading நேனோ: ஓர் அறிமுகம் – கட்டுரை 3 – நேனோ-விளைவு: தங்கத்தின் நிறம் நீலம்