அச்சுவை பெறினும்… நாவல்

arunn-achuvai-perinum-frontஅச்சுவை பெறினும்… என் இரண்டாவது நாவல். தமிழினி வெளியீடு.

வழக்கம்போல, வாசிக்க மனமிருப்போருக்கு உலகின் மூலை முடுக்கிலெல்லாம் கிடைக்கும். புத்தக வடிவில் வாசிப்பதற்கு ஓர் விலையை அளிக்கவேண்டியிருப்பதைத் தவிர்க்க இயலாது.

நேரடியாக வாங்குவதற்கு, பதிப்பக அலைபேசி எண்:  9344290920

ஆன்லைன் ஆர்டர் (இந்தியா) — உடுமலை டாட் காம் வலைதளம்

அமெரிக்கா/கனடாவில் பெறுவதற்கு எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் (முகவரி அறிமுகம் பக்கத்தில் உள்ளது) — அருண்

*

தத்தமது சதிபதிகளுடன் அமெரிக்கா பெங்களூர் என்று இல்லறம் பேணும் இருவர் மீண்டும் காதலர்களாய்த் தாங்கள் வளர்ந்த சிற்றூரில் இரு தினங்கள் சந்தித்துக்கொள்ள நேர்ந்தால்? இல்புறக் காதலின் அச்சுவையைப் பெறுவதற்கான விலையை இல்லற அன்பும் அறனும் பொறுக்க வல்லதா?

இதுதான் புத்தகப் பின் அட்டைக்கு எழுதிக் கொடுத்துள்ள சாரம்.

மேலும்… என்றால், இது காதல் கதை. காதலைப் பற்றிய கதை. காதலிப்பதும் காதலில் இருப்பதும் ஒன்றா என்பது பற்றிய கதை. காதலில் இருப்பதும் காதலித்து இருப்பதும் ஒன்றா என்பது பற்றிய கதை. காதலித்து இருப்பதும் காதலித்திருப்பதும் ஒன்றா என்பது பற்றிய கதை. மண்ணில் இந்தக் காதல் இன்றி யாருக்கோ வாழ்தல் கூடலாம், அதில் யாருக்கே காதல் கணங்கள் கூடும்?

*

நாவலின் தலைப்பு, பாசுரத்தில் சுட்டது. அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமாநகருளானே. உள்ளடக்கம் வாழ்க்கையில் சுட்டது.

*

வாசகர்கள் வாசிப்பனுபவத்தை (வாசித்தபின்) வழங்கினால் மகிழ்வேன்.

*

வாசித்தவர் அனுப்பிவைத்த கருத்துகள்: வெங்கட்ரமணன் | பெங்களூர் வாசகர்கோகுல் பிரசாத்சங்கீதா

*

முன் அட்டை ஓவியம் அடியேன் வரைந்ததே. பின் அட்டை ஓவியம், இல்லாள் + இவன் கூட்டு முயற்சி.

arunn_acchuvai perinum_novel