அறிமுகம்

அருண் நரசிம்மன் அருண் நரசிம்மன் image
image image image

நான் ஒரு பேராசிரியர். அறிவியல் இசை இலக்கியத் துறைகளில் ஆர்வமுள்ளவன். ஆங்கிலத்திலும் தமிழிலும் சில அறிவியல் நூல்கள் எழுதியுள்ளேன். அமெரிக்க தேசி என் முதல் தமிழ் நாவல். அச்சுவை பெறினும்… இரண்டாவது. பொறியியல் இயற்பியல் துறைகளில் சில பல ஆய்வுக்கட்டுரைகளும் வழங்கியுள்ளேன். ஆங்கிலத்திலும் தமிழிலும் (தி ஹிந்து, தினமலர், அம்ருதா, சொல்வனம் போன்ற) ஊடகங்களில் அறிவியல் கட்டுரைகள், கர்நாடக இசை விமர்சனங்கள் எழுதியுள்ளேன். அவ்வப்போது புன்னகையும் செய்வேன்.

மற்றபடி  விஞ்ஞானி வேஷ்டி கட்டிக்கொள்ளலாமா என்பது போன்ற உபத்திரவமில்லாத சிந்தனைகளுடன் அரையாடை, அலைபேசியுடன் தெருவோரமாக நடந்து செல்லும் சென்னைவாசி. ஸ்ரீரங்க விசுவாசி.

இத்தளத்தில் அண்மையில் எழுதியவை… | தொடர்புகொள்ள


Copyright: தளத்தில் இருக்கும் எழுத்து அனைத்தும் என்னால் மட்டுமே காப்புரிமைபடுத்தப்பட்டவை. இணையத்தில் முறைப்படி பகிரலாம். என் அனுமதியின்றி வேறு ஊடகங்களில் பிரசுரிக்கவோ, காப்பி அடிக்கவோ, காசிற்கு விற்கவோ உரிமையில்லை.


Disclaimer: நான் இங்கு எழுதியுள்ள கருத்துகளுக்கு என் வேலை நிறுவனம் பொறுப்பேற்பதாகப் பொருள் விளக்கம் எடுத்துக்கொள்ள இயலாது. என் கருத்துகள் எத்துனைப் பகுத்தறிவுள்ளதாகவும், சாதுர்யமானதாகவும் இருப்பினும்.

இத்தளத்தில் வெளியாகும் கதை, நாவல் போன்றவை புனைவாக்கங்கள். அவற்றின் உள்ளடக்கம் முழுவதும் ஆசிரியருடைய கற்பனையே. நிஜப் பெயர்கள், மனிதர்கள், இடங்கள், நிறுவனங்கள், சம்பவங்கள் போன்றவற்றுடன் ஒத்திருந்தால் அது தற்செயலே.

— அருண்